100 பேரைக் கொன்ற மருத்துவர்.! முதலைகளுக்கு இரையாக்கிய கொடுமை.!!

2 August 2020, 12:08 pm
Delhi Doctor Arrest - Updatenews360
Quick Share

டெல்லி : 100 பேரைக் கொலை செய்த முதலைகளுக்கு இரையாக்கிய ஆயுர்வேத மருத்துவரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 1984ஆம் ஆண்டு தேவேந்தர் சர்மா என்ற ஆயுர்வேத மருத்துவர், மருத்துவமனையை ஆரம்பித்தார். தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் அதிக பணம் சம்பாதிக்க தவறான வழிகளை கையாண்டார்.

எரிவாயு சிலிண்டர் தனது நிறுவனத்திற்க தேவைப்படுகிறது என்பதால், எரிவாயு விநியோகம் செய்யும் லாரிகளில் உள்ள ஓட்டுநர்களை கொன்றார். எரிவாயு சிலிண்டர் தொழில் கை கொடுக்காததால் தனியாக ஏஜென்சி ஒன்று அமைத்தார்.

அதில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் லாரிகளின் ஓட்டுநர்களை கொன்று முதலைகளுக்கு உணவாக கொடுத்தார். விசித்தர, வித்தியாசமாக, விபரீத ஆசைக் கொண்ட இந்த மருத்துவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தார்.

வெளி வந்த பின்பும் இவருடைய ஆசை அடங்கவில்லை. டாக்சி ஒட்டுநர்களை கடத்தி கொன்றது மட்டுமல்லாமல் கிட்னி திருடும் கும்பலோடு இணைந்து செயல்பட்டார். தொடர்ந்து கொலை குற்ற வழக்குகளில் ஈடுபட்ட இவரை போலீசார் கைது செய்து மீண்டும் சிறையிலடைத்தனர்.

இதனால் இவருடைய முதல் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு நிரந்தரமாக மருத்துவரை பிரிந்தார். 16 வருடம் சிறைவாசம் முடித்து வெளியே வந்த மருத்துவர், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மீண்டும் தனது வேட்டையை ஆரம்பித்தார். அடுத்தடுத்து தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இவர் இதுவரை 100 கொலை செய்து, சடலங்களை முதலைகளுக்கு இரையாக கொடுத்துள்ளார் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதையடுத்து மருத்துவர் தேவேந்திர சர்மாவை டெல்லியில் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆயிரம் பேரை கொன்றால் தான் அரைவைத்தியன் என்ற பழமொழியை தப்பா புரிஞ்சுகிட்டாரு போல…

Views: - 10

0

0