இனி ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைச் சிகிச்சை செய்யலாம்..! பாரம்பரிய மருத்துவ முறைக்கு புத்துயிரூட்டும் மத்திய அரசு..!

23 November 2020, 8:09 am
Ayurvedha_UpdateNews360
Quick Share

ஆயுர்வேதத்தின் முதுகலை பட்டதாரிகள் பொது அறுவை சிகிச்சை, எலும்பியல், கண் மருத்துவம், ஈ.என்.டி மற்றும் பல் நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளைச் செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மருத்துவமுறையை அடுத்த கட்டத்திற்கு மத்திய அரசுநகர்த்தியுள்ளது.

இந்திய மருத்துவ முறைக்கான மத்திய மருத்துவ கவுன்சில் (சி.சி.ஐ.எம்) வெளியிட்டுள்ள ஒரு கெஜட் அறிவிப்பில் ஆயுர்வேதத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்கள், அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை மேற்கொள்ள முறையான பயிற்சி பெற அனுமதிக்கபப்டுவதாக குறிப்பிட்டுள்ளது. 
இந்த அறிவிப்பு, நரேந்திர மோடி அரசாங்கத்தின் கீழ் பாரம்பரிய மருத்துவத்திற்கு அதிகரித்து வரும் முக்கியத்துவத்தைக் குறிக்கிறது.

புதிய கெஜட் அறிவிப்பின் படி, அறுவை சிகிச்சை முறைகளுக்கான பயிற்சி தொகுதிகள் ஆயுர்வேத ஆய்வுகளின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“சிசிஐஎம், மத்திய அரசின் முந்தைய அனுமதியுடன், இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (முதுகலை ஆயுர்வேத கல்வி) விதிமுறைகள், 2016’ஐ திருத்துவதற்கு பின்வரும் விதிமுறைகளை மேலும் செய்கிறது” என்று கெஜட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்திற்கு இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் (முதுகலை ஆயுர்வேத கல்வி) திருத்தம் விதிமுறைகள், 2020 என மறுபெயரிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இரண்டு பாடங்கள் மூலம் அறுவை சிகிச்சைகளில் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அவர்களுக்கு எம்.எஸ் (ஆயுர்வேதம்) ஷால்யா தந்திர பொது அறுவை சிகிச்சை மற்றும் எம்.எஸ். ஆயுர்வேதம்) ஷாலக்யா தந்திரம் (கண், காது, மூக்கு, தொண்டை, தலை மற்றும் கதிரியக்க நோய்) ஆகியவை குறித்து கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாரம்பரிய மருத்துவ முறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த அறிவிப்பு மிகவும் பயன்படும் என்றாலும், மறுபக்கம் அந்நிய மருத்துவ முறையான அலோபதி மருத்துவத்தை பின்பற்றும்  இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவிக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

Views: - 0 View

0

0

1 thought on “இனி ஆயுர்வேத மருத்துவர்களும் அறுவைச் சிகிச்சை செய்யலாம்..! பாரம்பரிய மருத்துவ முறைக்கு புத்துயிரூட்டும் மத்திய அரசு..!

Comments are closed.