இணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ

2 May 2021, 5:21 pm
Quick Share

வனப்பகுதியில், குட்டி யானை ஒன்று தனியாக விளையாடி மகிழும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

யானைகள் என்றாலே நம் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான விசயம் ஆகும். இதிலும் குட்டி யானைகள் என்றால், நம் மனம் அடையும் ஆனந்தத்துக்கும் எப்போதும் அளவே இல்லை. குட்டி யானை ஒன்று வனப்பகுதியில் தனியாக விளையாடி மகிழும் வீடியோ, டுவிட்டர்வாசிகளிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த கொரோனா பெருந்தொற்றும் சோக காலத்தில், நம் மனதிற்கு இதம் அளிக்கும் விதமாக, இந்த வீடியோ அமைந்துள்ளது என்று கூறினால், அது மிகையல்ல.

வனப்பகுதியில், எவ்வித விலங்கும் இல்லாததால், குட்டி யானை ஒன்று, வைக்கோல் கட்டுடன் தனியாக விளையாடி மகிழும் வீடியோவை, இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவிற்கு தலைப்பாக, இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?… தனியாக இருங்கள், விழிப்புடன் இருங்கள். வீட்டிலேயே ஆனந்தமாக இருந்தால், கொரோனா தொற்று பரவல் சஙகிலியை நாம் கட்டுப்படுத்தலாம் என்பதே இதற்கான பதில் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 3.8 லட்சத்தை கடந்துள்ள நிலையில், மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துள்ளது.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், மாஸ்க் அணிந்தும், அடிக்கடி சானிடைசரை கொண்டு கைகளை கழுவி வந்தாலே, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 71

0

0

Leave a Reply