ஆய்வுக் கூட்டத்தில் சுட்டுக்கொலை செய்த எம்எல்ஏ உதவியாளர்..! வேடிக்கை பார்த்த போலீஸ்..! போலீசார் மீது நடவடிக்கை எடுக்க யோகி உத்தரவு..!

Author: Sekar
16 October 2020, 12:16 pm
Quick Share

உத்தரப்பிரதேசத்தின் பல்லியாவில் ரேஷன் கடைகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் முன் பாஜக எம்.எல்.ஏவின் உதவியாளரால் நேற்று ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

கொலையாளியால் 20 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

முக்கிய குற்றம் சாட்டப்பட்ட தீரேந்திர சிங்கை போலீசார் விடுவித்ததை உறுதிப்படுத்திய டி.ஐ.ஜி சுபாஷ் சந்திர துபே, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் சந்திரமாவின் புகாரின் பேரில் 15-20 பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட தீரேந்திர சிங் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆவார்.

“இந்த சம்பவத்தை தீவிரமாக கவனித்து, சம்பவ இடத்தில் இருந்த எஸ்.டி.எம்., சி.ஓ மற்றும் காவல்துறையினர் அனைவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்” என்று உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி லக்னோவில் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தில் அதிகாரிகளின் பங்கு குறித்து விசாரிக்கப்படும். தேவைப்பட்டால் போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

ஊடகங்களுடன் பேசிய டி.ஐ.ஜி சுபாஷ் சந்திர துபே, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறினார்.

“குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றங்களைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள்” என்று டி.ஐ.ஜி. மேலும் தெரிவித்தார்.

Views: - 37

0

0