பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கம்: தென்மேற்கு ரயில்வே அறிவிப்பு..!!

15 July 2021, 9:08 am
Quick Share

பெங்களூரு: வரும் 21ம் தேதி முதல் பெங்களூரு-சென்னை சதாப்தி அதிவிரைவு ரயில்கள் மீண்டும் இயக்கப்படுவதாக தென்மேற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகள் வருகை குறைந்ததால் நாட்டில் பல்வேறு ரயில்கள் நிறுத்தப்பட்டன. தற்போது பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஏராளமான ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டு வருகிறது.

Train Cigerette -Updatenews360

இதேபோல பயணிகள் வருகை குறைவால் நிறுத்தப்பட்டிருந்த கே.எஸ்.ஆர். பெங்களூரு- எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சதாப்தி அதிவிரைவு ரயில்கள் (வண்டி எண்: 02028/02027) இருமார்க்கமாகவும் வருகிற 21ம் தேதி முதல் இயங்குகிறது.

இதேபோல சித்தரோட சுவாமி உப்பள்ளி – எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07333) உப்பள்ளியில் இருந்து வருகிற 21ம் தேதி இயங்குகிறது. மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்- சித்தரோட சுவாமி உப்பள்ளி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (07334) சென்னையில் இருந்து வருகிற 22ம் தேதி முதல் இயங்குகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 138

0

0