வாழ்வதற்கு வசதியான நகரங்களின் பட்டியல்: பெங்களூர் சிட்டி முதலிடம்..!!
5 March 2021, 1:12 pmபுதுடெல்லி: வாழ்வதற்கு வசதியான நகரங்களின் பட்டியலில் பெங்களூர் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில், சென்னைக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், நாட்டில் 111 நகரங்களில் மக்கள் வாழ்வதற்கு தேவையான வசதிகள் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை ஆய்வுசெய்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
2020ம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து புனே, அகமதாபாத், சென்னை, சூரத், நவி மும்பை, கோவை, வடோதரா ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
பரேலி, தன்பாத், ஸ்ரீநகர் ஆகிய நகரங்கள் கடைசி இடத்தில் உள்ளன. 10 லட்சத்துக்குள் மக்கள் வசிக்கும் நகரங்களில் சிம்லா முதலிடத்திலும் புவனேஸ்வர் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பிஹாரின் முசாபர்பூர் கடைசி இடத்தில் உள்ளது.
0
0