இந்திய குடியரசு தின அணிவகுப்பில் வெளிநாட்டு ராணுவம்: முதல் முறையாக பங்கேற்கும் வங்காளதேச படை..!!

24 January 2021, 8:10 am
republic day rally - updatenews360
Quick Share

புதுடெல்லி: குடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்க உள்ளன.

இந்திய குடியரசு தினத்தையொட்டி வருகிற 26ம் தேதி டெல்லியில் பிரமாண்டமான விழா நடைபெறுகிறது. இதில் இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. இந்த ராணுவ அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்கிறது.

வங்காளதேசம் விடுதலை பெற்ற 50வது ஆண்டு நிறைவையொட்டி இந்த அணிவகுப்பில் அந்த நாடும் கலந்து கொள்கிறது. அந்நாட்டின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் அடங்கிய குழுவினர், இந்த ஆண்டு அணிவகுப்பில் முதலில் செல்வார்கள். இந்த அணிவகுப்பில் வங்காளதேச ராணுவ இசைக்குழுவினரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் 3வது வெளிநாட்டு ராணுவம் என்ற பெருமையை பெறுகிறது வங்காளதேசம். ஏற்கனவே பிரான்ஸ் (2016), அமீரக (2017) நாடுகளின் படைகளும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றுள்ளன.

Views: - 0

0

0