என் பணத்த எல்லாமே எடுத்துக்கோங்க ‘ஆள மட்டும் விடுங்க’ : மல்லையா கெஞ்சல்!

14 February 2020, 5:26 pm
vijay mallya- updatenews360
Quick Share

வங்கிகளிடம் பெற்ற கடனுக்காக என்னிடம் உள்ள அனைத்து பணத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள் என வங்கிகளிடம் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளிடம் இருந்து சுமார் 9,000 கோடி அளவிற்கு வங்கிக் கடனை பெற்றுள்ளார். பின்னர், அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, அவர் மீது பல்வேறு வங்கிகள் வழக்கு தொடர்ந்தன. அதனடிப்படையில், அவரை நாடு கடத்துவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், விஜய் மல்லையாவை நாடு கடத்த அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த வழக்கு கடந்த 3 நாட்களாக விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு பிறகு, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் விஜய் மல்லையா பேசினார்.

அப்போது, அவர் கூறுகையில், “நான் வங்கி மோசடியில் எல்லாம் ஈடுபடவில்லை. வங்கிகளுக்கு நான் செலுத்த வேண்டிய அனைத்து அசல் தொகை அனைத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். வங்கிகளின் நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கின்றேன். அமலாக்க இயக்குநரகமும், வங்கிகளும் எனது ஒரே சொத்துக்களை கைப்பற்ற போராடுகின்றன. மத்திய அரசு என் மீது வழக்கு தொடர்ந்தது நியாயமற்றது,’ எனக் கூறினார்.