தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார்!!

10 July 2021, 9:06 am
Quick Share

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்து பேசுகிறார்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திரமோடியை இன்று சந்தித்து பேசுகிறார். இதற்காக நேற்று இரவு 9.50 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

banwarilal prohit - updatenews360

இன்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசும்போது, தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா தடுப்புக்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்து தெரிவிப்பார் என தெரிகிறது. பிரதமர் நரேந்திரமோடியுடனான இந்த சந்திப்பு திடீர் சந்திப்பாக கூறப்பட்டாலும், ஏற்கனவே முன் அனுமதி பெற்ற பிறகே இந்த சந்திப்பு நடைபெறுவதாக தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமரை முதல் முறையாக சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 138

0

0