லவ் ஜிகாத் வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ்..! காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்..!

21 October 2020, 1:10 pm
Bareilly_Love_Jihad_UpdateNews360
Quick Share

லவ் ஜிஹாத் வழக்கில் போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் தவிர்த்து வந்ததால், காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக மற்றும் வி.எச்.பி தொண்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் ஒரு இந்துப் பெண் கடத்தப்பட்டு இந்து அல்லாத பையனை திருமணம் செய்ய நிர்பந்திக்கப்பட்டார்.

இந்த தொண்டர்கள் கிலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டதோடு, கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்நிலையத்தை சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இளம் பெண்ணின் வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது. அதில் அவர் தான் ஒரு மேஜர் என்றும், தனது காதலன் பிலால் உடன் தனது வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார்.

எனினும், இந்த வீடியோ இளம் பெண்ணை மிரட்டி படமாக்கியதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். பிலாலை கைது செய்து பெண்ணை மீட்குமாறு அவர்கள் இப்போது போலீசாரிடம் கோருகின்றனர்.

போராட்டக்காரர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில் இருந்தனர். அவர்களைக் கலைக்க போலீசார் பலத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது. உள்ளூர் பாஜக எம்எல்ஏ அருண்குமார் மற்றும் பித்ரி எம்எல்ஏ பப்பு பார்தவுல் ஆகியோரும் காவல் நிலையத்தை அடைந்தனர்.

இந்த த விவகாரத்தில் கிலா காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் மாலுக்பூர் புறக்காவல் நிலையத்தின் இரண்டு கான்ஸ்டபிள்களும் இடைநீக்கம் செய்யப்பட்டதாக பரேலியின் எஸ்.எஸ்.பி ரோஹித் சிங் சஜ்வான் தெரிவித்தார்.

சஜ்வான் மேலும் போலீஸ் நிலையத்தை கொள்ளையடித்தது மற்றும் அதன் சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஐந்து நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போலீஸ் நிலையத்தில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டவர்களை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்வார்கள் என்று அவர் கூறினார்.

சிறுமியைக் கடத்தியதாகக் கூறப்படும் வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை மீட்க தேடுதல் நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Views: - 13

0

0