பவன் கல்யாண் பிறந்தநாள் : பேனர் கட்டும் போது 4 பேர் பலியான கொடுமை!!

2 September 2020, 10:01 am
Andhra 4 Dead - Updatenews360
Quick Share

ஆந்திரா : சித்தூர் அருகே ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பிறந்த நாளை முன்னிட்டு பேனர் கட்டும் முயற்சியில் ஈடுபட்ட தொண்டர்கள் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழந்தனர்.

தெலுங்கு திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாற்றம் பெற்று தற்போது ஜன சேனா என்ற கட்சியின் தலைவராக இருப்பவர் முன்னாள் நடிகர் பவன் கல்யாண். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு சித்தூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் அருகே இருக்கும் கடிரியோபனபள்ளி கிராமத்தில் கட்சி தொண்டர்கள் நேற்று இரவு பேனர்களை கட்டி கொண்டிருந்தனர்.

அப்போது பேனர் ஒன்று மின்சார வயரில் சிக்கி அதில் பொருத்தப்பட்டிருக்கும் கம்பி வழியாக மின்சாரம் 7 பேர் மீது பாய்ந்தது. இந்த சம்பவத்தில் அதே இடத்தில் ஒருவர் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3 பேர் பரிதாபமாக மரணம் அடைந்தனர். மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Views: - 6

0

0