தடையை மீறி பட்டாசு வெடிப்பா..? டிஜிட்டல் முறையில் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கும் போலீசார் ..!

11 November 2020, 3:42 pm
GPS_Fire_Cracker_Monitor_Device_UpdateNews360
Quick Share

காளி பூஜையின் போது பட்டாசு தடையை மீறும் நபர்களைக் கண்டறிய மேற்கு வங்காளம் முழுவதும் பல காவல் நிலையங்களில் 1,000’க்கும் மேற்பட்ட ஜி.பி.எஸ் பொருத்தப்பட்ட ஒலி கண்காணிப்பு சாதனங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. காளி பூஜை மற்றும் வரவிருக்கும் பிற பண்டிகைகளின் போது பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் வெடிப்பதற்கும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

“கொல்கத்தா மற்றும் மேற்கு வங்க போலீஸ் படைகள் பட்டாசு வெடிக்கும் இடத்தை சுட்டிக்காட்டவும், குற்றவாளியை உடனடியாகக் கண்டறியவும் இந்த சாதனங்கள் உதவும்” என்று மேற்குவங்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் கல்யாண் ருத்ரா தெரிவித்தார்.

இந்த ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட கருவிகளில், டெசிபல் மட்டத்துடன் பட்டாசு வெடிக்கும் இடம், தேதி மற்றும் நேரம் ஆகியவற்றைக் காட்டுகிறது. கருவியுடன் இணைக்கப்பட்ட ஒரு பிரிண்டர் ஆவண சான்றுகள் மற்றும் வழக்குகளுக்கான விவரங்களை அச்சிட உதவுகிறது, என்றார்.

“கருவிகளை இயக்க நாங்கள் காவல்துறைக்கு கற்றுக் கொடுத்தோம். ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாசு கட்டுப்பாட்டு வாரியக் குழு, உள்ளூர் போலீஸ்காரர்களுடன் ஒருங்கிணைந்து தேவைப்பட்டால் உதவி வழங்கும்” என்று அந்த அதிகாரி கூறினார்.

ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட சாதனங்கள், அரசு நடத்தும் ஐடி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு காளி பூஜைக்குப் பின்னர் காவல்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகின்றன.

முன்னதாக, காவல்துறையினர் ஜி.பி.எஸ் டிராக்கர் இல்லாமல் ஒலி கண்காணிப்பு கருவிகளைப் பயன்படுத்தினர் மற்றும் ஒரு பகுதியில் ஒலி மாசுபாட்டைப் பதிவுசெய்த பின்னர் மீறுபவர்களைக் கைது செய்ய முயன்றனர்.

இந்நிலையில், தற்போது கொடுக்கப்பட்டுள்ள புதிய கருவியில், இன்னும் மேம்பட்ட அம்சங்கள் இருப்பதால், விதிமீறுபவர்களை கண்டறிவது காவல்துறைக்கு இன்னும் எளிதாகும்.

Views: - 18

0

0