மேற்குவங்க காங்கிரஸ் வேட்பாளர் ரெசால் ஹாக் கொரோனாவால் மரணம்..! தொண்டர்கள் சோகம்..!

15 April 2021, 2:49 pm
congress_candidate_death_bengal_updatenews360
Quick Share

மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சாம்சர்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இறந்த காங்கிரஸ் வேட்பாளர் ரெசால் ஹாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை கொல்கத்தா மருத்துவமனையில் ஹாக்கிற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசும் இடதுசாரிகளும் மாநிலத்தில் தேர்தல் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியும் இடதுசாரிகளும் தங்கள் வேட்பாளர்களை சாம்சர்கஞ்சில் நேரெதிராக களமிறக்கியுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொடசார் ஹொசைனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பாக ஹாக் களமிறக்கப்பட்டார்.

ஏப்ரல் 17’ஆம் தேதி ஐந்தாவது கட்டத் தேர்தலின்போது சாம்சர்கஞ்ச் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறவிருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளரின் மரணத்தால், அந்த தொகுதியில் மட்டும் தேர்தல் தள்ளிப்போகும் எனக் கூறப்படுகிறது.

முன்னதாக, இதே போல் தமிழகத்திலும், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாதவ் ராவ், தேர்தல் முடிந்த சில நாட்களில் காலமானது குறிப்பிடத்தக்கது. 
தமிழகம், மேற்குவங்கம் என காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவர் தொடர்ச்சியாக மரணமடைந்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 27

0

0