கமலேஷ் திவாரியை நினைவூட்டும் பெங்களூரு கலவரம்..! திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா..?

12 August 2020, 11:53 pm
Bengalore_Riots_UpdateNews360
Quick Share

கமலேஷ் திவாரி விவகாரம் நினைவிருக்கிறதா? 2015’ஆம் ஆண்டில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவர் ஒரு ஆட்சேபகரமான கருத்தைத் தெரிவித்ததிலிருந்து அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. பல மாதங்கள் சிறையில் கழித்தபின் மற்றும் தொடர்ச்சியாக உயிருக்கு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட பின்னர், அவர் அக்டோபர் 2019’இல் கொல்லப்பட்டார். 

கும்பலாக கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.’வின் மருமகன் நவீன் மீது நடத்தப்பட்ட ​​தாக்குதல்,  கமலேஷ் திவாரி கதை போன்ற சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்தியுள்ளது. அமைதியான நகரமான பெங்களூரை உலுக்கிய கலவரங்கள் கமலேஷ் திவாரி கருத்துக்குப் பின்னர் ஏராளமான வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்திய இதேபோன்ற விளைவைத் தொடங்கியதாகத் தெரிகிறது.

சமூக ஊடகங்களில் ஆத்திரமூட்டும் பதிவுகள் :
பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இரண்டும் நவீனுக்கு எதிரான பதிவுகள் மற்றும் கருத்துகளால் நிரப்பப்பட்டுள்ளன. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் குரல் எழுப்பி, அவரின் உயிரை பலி கேட்கிறார்கள்.

பேஸ்புக்கில் இது தொடர்பாக ஒரு பதிவின் கீழ் வெளியிடப்பட்ட சில கருத்துகள் இங்கே:

இதுவரை மூன்று பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த கலவரத்தில் 60 காவல்துறை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதுவரை 110 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 144 தடையுத்தரவு முழு பெங்களூரு நகரத்திலும் விதிக்கப்பட்டுள்ளது.

கருத்து வெளியிட்ட தலித் எம்.எல்.ஏவின் மருமகன் நவீன் வீடு எரிக்கப்பட்டுள்ளது. மதச்சார்பின்மைவாதிகளாக காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் வழக்கம் போல் இந்த விஷயத்தில் அமைதி காத்து வருகிறார்கள்.

மால்டா கலவரத்தின் பயங்கரமான நினைவுகள் :
கமலேஷ் திவாரி சிறையில் இருந்தபோது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தெருக்களில் வந்த மால்டா கலவரத்தை, பெங்களூரில் நேற்று நடந்த கலவரம் நினைவூட்டியது. திவாரி தனது கருத்துக்காக கொல்லப்பட வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

போராட்டக்காரர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள பொதுச் சொத்துக்களை எரித்தனர். கலவரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான ஒரு வாகனமும் தீக்கிரையாக்கப்பட்டது. அவர்கள் கலியாசக் ஸ்டேஷன் பகுதியில் பல வீடுகளை எரித்தனர். மேலும் கலவரத்தின் போது கடைகளையும் சூறையாடினர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், திடீரென மிக அதிகமான மக்கள் கூட்டம் கூடியதை வைத்து பார்க்கும் போது, இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது தெளிவாக தெரிவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, சமூக ஊடகங்களில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில் ஒரு இஸ்லாமிய நபர் பதிவிட்ட நிலையில், அதற்கு பதிலடியாகவே நவீனால் இந்த பதிவு போடப்பட்டுள்ளது வெளிவந்துள்ளது.

எனவே கிருஷ்ணரை இழிவுபடுத்தி பதிவு போட்டதற்காக இதே போல் கொளுத்தினால் என்னாகும் எனக் கேள்வியெழுப்பியுள்ள நடுநிலையாளர்கள், அடுத்தவர் மத விவகாரங்கள் குறித்து பதிவிடுவதை தவிர்த்தால் இது போன்ற பிரச்சினைகளே எழாது எனத் தெரிவித்துள்ளனர்.

Views: - 4

0

0