பெங்களூரு வன்முறை : 3 கோடி மதிப்பிலான பொருட்கள் கொள்ளை..! எம்எல்ஏ வீட்டில் இஸ்லாமிய கும்பல் வெறியாட்டம்..!
16 August 2020, 12:18 pmகாங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாச மூர்த்திக்குச் சொந்தமான பெங்களூரின் டி.ஜே.ஹல்லியில் உள்ள இல்லம் இஸ்லாமிய கும்பலால் தீ வைத்துக் கொளுத்துவதற்கு முன்னர், வன்முறையின் போது அவரது வீட்டில் இருந்து ரூ 3 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11 அன்று, கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பேஸ்புக்கில் ஒரு பதிவு போடப்பட்ட நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நபிகள் நாயகத்தை அவமதித்து எம்எல்ஏவின் மைத்துனர் நவீன் என்பவர் ஒரு பதிவு போட, இதை சாக்காக வைத்து, சுமார் 200-300 பேர் அவரது வீடு மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பிற சொத்துக்களை தீ வைத்து கொளுத்தினர்.
மேலும் பெங்களூரு நகர தெருக்கள், காவல் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் எம்எல்ஏ வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துள்ளனர் என இந்த வழக்கு தொடர்பான ஒரு எஃப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தொடர்ந்து 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எம்எல்ஏ ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்தது தான் அவர் சம்பவம் நடந்து சில நாட்களுக்குப் பிறகு புகாரளிப்பதற்குக் காரணம் என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவும் தனக்கு இருப்பதாக மூர்த்தி அப்போது கூறினார்.
இதற்கிடையில், பெங்களூரு வன்முறை தொடர்பாக மேலும் 35 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 340’யை எட்டியுள்ளது.
டி.ஜே.ஹல்லி மற்றும் கே.ஜி.ஹல்லி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவை ஆகஸ்ட் 18’ஆம் தேதி காலை 6 மணி வரை மாநில அரசு நீட்டித்துள்ளது.