அனுமதியே இல்லாமல் இயங்கிய அரசு பொது மருத்துவமனை..! தீ விபத்திற்கு காரணம் இது தானா..? பரபர பிண்ணனி..!

12 January 2021, 8:01 pm
Bhandhra_Hospital_Fire_UpdateNews360
Quick Share

மகாராஷ்டிராவின் பாந்த்ரா மாவட்ட அரசு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தீயணைப்புத் துறையிடமிருந்து எந்தவொரு தடையில்லா சான்றிதழும் (என்ஓசி) இல்லாமல் அரசாங்கத்தால் இயங்கும் பாந்த்ரா மாவட்ட பொது மருத்துவமனை செயல்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

முறையான அனுமதி இல்லாமல் மகாராஷ்டிரா அரசு மருத்துவமனையை இயக்கியுள்ள தகவல் வெளியான நிலையில், மாநில அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

கடந்த ஜனவரி 9’ஆம் தேதி கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள பாந்த்ராவில் உள்ள அரசு நடத்தும் மருத்துவமனையின் குழந்தை பராமரிப்பு வார்டில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 குழந்தைகள் கொல்லப்பட்டனர். மேலும் ஏழு பேர் தீக்காயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.

இதற்கிடையில், குழந்தைகள் மரணம் தொடர்பாக மகாராஷ்டிரா அரசு மற்றும் மாநில காவல்துறைத் தலைவருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜனவரி 9’ம் தேதி மகாராஷ்டிராவின் பாந்த்ரா மாவட்ட பொது மருத்துவமனையில் குழந்தை பராமரிப்பு பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் பத்து குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து, விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது.

“அதிகாலை 1.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் வார்டில் வைக்கப்பட்டுள்ள பதினேழு குழந்தைகளில் ஏழு பேரை மட்டுமே மருத்துவமனை நிர்வாகத்தால் மீட்க முடிந்துள்ளது” என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தவ் தாக்கரே அரசு உத்தரவிட்டுள்ளது. இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ 5,00,000 இழப்பீடு வழங்குவதாக அவர் அறிவித்தார்.

“கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரமாக இருந்தாலும், ​​சுகாதார நிர்வாகம் மற்றும் மருத்துவமனைகள் பாதுகாப்பு பிரச்சினைகளை புறக்கணிக்கக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்ள, மாநிலத்தின் அனைத்து மருத்துவமனைகளின் தீ தணிக்கை நிலையை சரிபார்க்க அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.” என உத்தவ் தாக்கரே கூறினார்.

Views: - 8

0

0