‘நோ சேலஞ்ச்… ஒன்லி சைலண்ட்’ பவானிபூர் இடைத்தேர்தல்… வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மம்தா!!

Author: Babu Lakshmanan
10 September 2021, 2:29 pm
Mamata 5 Lakhs - Updatenews360
Quick Share

பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.

மேற்கு வங்க மாநிலத்திற்கு அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வியை சந்தித்தார். பின்னர், தனது தோல்வியில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே, மம்தா பானர்ஜி போட்டியிடுவதற்கு ஏதுவாக பவானிபூர் தொகுதி எம்எல்ஏ சுபன்தீப் சந்தோபத்யாயே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து, பவானிப்பூர், சாம்செர்காச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.

கடந்த தேர்தலில் போது பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் சவால் விட்டுச் சென்று தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது அமைதியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்து வந்துள்ளார் மம்தா.

Views: - 241

0

0