பீமா கோரேகான் வழக்கு..! 8 பேர் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ..!

Author: Sekar
9 October 2020, 7:19 pm
NIA_Updatenews360
Quick Share

2018 ஜனவரி 1’ஆம் தேதி பீமா கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக சமூக ஆர்வலர் கௌதம் நவ்லங்கா, டெல்லி பல்கலைக்கழக இணை பேராசிரியர் ஹனி பாபு மற்றும் கிறிஸ்தவ பாதிரியார் ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 8 பேர் மீது என்ஐஏ இன்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குற்றப்பத்திரிகை என்ஐஏ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாக என்ஐஏ செய்தித் தொடர்பாளர் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறினார். முன்னதாக விசாரணையின் போது எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு ஜனவரி 1, 2018 அன்று புனே அருகே கொரேகான் போரின் 200’வது ஆண்டு விழாவில் ஏற்பட்ட மோதல்களில் ஒருவர் கொல்லப்பட்டது மற்றும் பலர் காயமடைந்தது தொடர்பானது.

குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்ட மற்றவர்கள் கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்ப்டே, மற்றும் பீமா கோரேகான் ஷவுரியா தின் பிரேர்னா அபியான் குழுவின் செயற்பாட்டாளர்களான ஜோதி ஜக்தாப், சாகர் கோர்கே மற்றும் ரமேஷ் கெய்சோர் ஆகியோர் ஆவர்.

குற்றம் சாட்டப்பட்டவர்களாக மிலிந்த் டெல்டும்டேவையும் என்ஐஏ பெயரிட்டுள்ளது. அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். இந்த ஆண்டு ஜனவரி 24’ஆம் தேதி என்ஐஏ இந்த வழக்கை கையிலெடுத்து விசாரணையைத் தொடங்கியது.

இதையடுத்து தீவிரமாக நடத்திய விசாரணையின் அடிப்படையில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் மீது 10,000 பக்க குற்றப்பத்திரிகையையும் என்ஐஏ தாக்கல் செய்துள்ளது.

Views: - 48

0

0