விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதி பிந்தரன்வாலேவின் கொடி..? வீடியோ வெளியானதால் பரபரப்பு..!

6 February 2021, 8:14 pm
Bhindharanwale_Flag_UpdateNews360
Quick Share

விவசாய சங்கங்கள் இன்று மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை தங்களது நாடு தழுவிய சக்கா ஜாம் போராட்டத்தின் ஒரு பகுதியாகத் தடுத்தன. நாடு தழுவிய போராட்டம் எனக் கூறப்பட்டாலும் பஞ்சாப், ஹரியானா விவசாயிகளைத் தவிர வேறெங்கும் பெருமளவில் போராட்டம் நடைபெறவில்லை.

டெல்லி எல்லைகளில் உள்ள போராட்டத் தளங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள இணையத் தடை, அதிகாரிகள் மற்றும் பிற பிரச்சினைகளால் அவர்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் துன்புறுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக சக்கா ஜாம் போராட்டத்தை நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் லூதியானாவில் நடந்த சக்கா ஜாம் போராட்டத்தின் போது, ​​காலிஸ்தான் பயங்கரவாதியும், பொற்கோவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவருமான பிந்தரன்வாலுடன் ஒத்த உருவப்படம் கொண்ட ஒரு கொடி ஒரு டிராக்டரில் காணப்பட்டதாக வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

காலிஸ்தானிய தீவிரவாத அமைப்பின் தலைவரான பிந்தரன்வாலே, 1984’ஆம் ஆண்டு ஜூன் மாதம் பொற்கோவில் வளாகத்தில் இந்திய ராணுவத்தால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். 

இந்நிலையில், கடந்த ஜனவரி 26’ஆம் தேதி டெல்லியில் நடந்த வன்முறையின் பின்னணியில் காலிஸ்தானிய தீவிரவாதிகள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதை உறுதி செய்யும் விதமாக தற்போது பிந்தரன்வாலே போன்ற ஒரு படத்துடன் கூடிய கொடி விவசாயிகளின் டிராக்டரில் பறக்கவிடப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0