மகாராஷ்டிராவில் முத்தலாக் கூறி விவாகரத்து..! காவல் நிலைய படியேறிய மனைவி..!

6 September 2020, 7:44 pm
triple_talaq_updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் தானேவில் உள்ள பிவாண்டியைச் சேர்ந்த 27 வயது நபர் தனது மனைவி மீது தடை செய்யப்பட்ட முத்தலாக் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு தனி சிவில் சட்டம் உள்ள நிலையில், அவர்களின் திருமனாத் சட்டத்தில் உள்ள முத்தலாக் எனும் விவாகரத்து முறையை தவறாக பயன்படுத்துவதாக வந்த புகார்களை அடுத்து கடந்த வருடம் மோடி அரசு இஸ்லாமிய பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முத்தலாக் முறையை சட்ட விரோதமாக அறிவித்தது.

இதை பயன்படுத்தினால் சிறைத் தண்டனை விதிக்கவும் மத்திய அரசு சட்டத்தில் வகை செய்துள்ளது. இந்நிலையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு முத்தலாக் குறித்த புகார்கள் அதிகம் வர ஆரம்பித்தது.

இந்நிலையில் அது போன்ற ஒரு சம்பவத்தில் பிவாண்டியில் உள்ள சாந்தி நகர் காவல் நிலையத்தில் நேற்று இரவு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

“ஆகஸ்ட் 29 அன்று, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவியை தனது மொபைல் தொலைபேசியில் அழைத்து, சண்டையிட்டுள்ளார். பின்னர் அவரை விவாகரத்து செய்ய மூன்று முறை தலாக் உச்சரித்தார்.” என்று பாதிக்கப்பட்ட மனைவி கூறினார்.  

முஸ்லீ ம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காலித் ஷேக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக துணை போலீஸ் கமிஷனர் ராஜ்குமார் ஷிண்டே தெரிவித்தார். இது குறித்து காவல் துறை விசாரணையை தொடர்ந்து வருகிறது.

Views: - 0

0

0