5 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை..! 13 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு..! மத்தியப்பிரதேசத்தில் பகீர் சம்பவம்..!

16 May 2021, 7:09 pm
Child_Sexual_Harrasment_UpdateNews360
Quick Share

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் 13 வயது சிறுவன் ஒருவன் ஐந்து வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் தாயின் புகாரைத் தொடர்ந்து, காவல்துறையினர் 13 வயது சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

சிறுமியும் பையனும் ஒரே இடத்தில் அருகருகே வசிப்பவர்கள் ஆவர். சிறுமியின் தாய், வெள்ளிக்கிழமை தனது புகாரில், காந்தி நகர் பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே தனது பெற்றோருடன் வசிக்கும் சிறுவன், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகளை வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். 

சிறுவன் தனது ஐந்து வயது மகளின் ஆடைகளை அகற்றிய பின்னர் தகாத முறையில் தொட்டதாக அவர் புகார் கூறினார்.

சிறுவன் இந்த செயலில் ஈடுபடும்போதே சிறுமியின் தாய் அந்த இடத்தை அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது மகள் சிறுவனின் மோசமான செயல் பற்றி தெரிவித்தார். சம்பவம் நடந்தபோது சிறுவனின் பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லை என்று புகார் கூறினார்.

காவல்துறையினர், புகாரின் அடிப்படையில், 13 வயதுடைய குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Views: - 190

0

0