குஜராத்தின் 17வது முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு : பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 5:07 pm
Gujarat CM - Updatenews360
Quick Share

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி கடந்த 2016-ம் ஆண்டு முதல் முதல்வராக இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்து விஜய் ரூபானி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தின் வளர்ச்சி பணிபுரிய ஆற்றலுடனும், உற்சாகத்துடனும் புதிய தலைமையின் கீழ் நோக்கி செல்ல வேண்டும். இதனை மனதில் வைத்து தான் பதவி விலகினேன் என கூறினார்.

இதைத்தொடர்ந்து, குஜராத்தில் இன்று மதியம் 3 மணி அளவில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் ஜோஷி ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

இந்நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான நரேந்திர சிங் தோமர் கூறினார்.

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் நாளை பதவியேற்கிறார் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்லோடியா தொகுதி பாஜக எம்எல்ஏவாக பூபேந்திர படேல் உள்ளார். குஜராத்தின் 17-வது முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்க உள்ளார்.

Views: - 228

0

0