அட்ராசக்க… முக்கிய கோரிக்கையுடன் அனைத்து கட்சி குழுவோடு பிரதமரை சந்தித்தார் நிதிஷ்குமார்..!!

Author: Babu Lakshmanan
23 August 2021, 11:37 am
Quick Share

அனைத்து கட்சி குழுவுடன் பிரதமர் மோடியை இன்று சந்தித்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

இந்தியாவில் கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது. எனவே, இந்த கணக்கெடுப்பை சாதி வாரியாக நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. ஆனால், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு மக்களைத் தவிர்த்து பிற சாதியினரை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தெரிவித்து விட்டது.

இருப்பினும், சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றன. இந்தக் கோரிக்கைக்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

இதற்கு அனுமதி கிடைத்த நிலையில், சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக அனைத்து கட்சி குழுவோடு பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியுள்ளார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்.

Views: - 356

0

0