மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கடும் மோதல்..! வைரலான பீகார் காங்கிரஸ் வீடியோ..!

12 January 2021, 5:56 pm
Congress_Patna_Fight_UpdateNews360
Quick Share

காங்கிரஸ் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில், பாட்னாவில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சி மேலிட பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் சந்தித்தபோது ஒரு பெரிய சலசலப்பு ஏற்பட்டது. தேர்தலில் காங்கிரஸின் தோல்வி மற்றும் டிக்கெட் விநியோகம் குறித்து கட்சித் தொண்டர்கள் கோபமடைந்தனர்.

இது தொடர்பாக வெளியான ஒரு வீடியோவில், கட்சி நிர்வாகிகள் கூச்சலிடுவதோடு, பீகார் தேர்தல்களில் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து கேள்விகளை எழுப்பியதோடு, இங்கு பதிவிட முடியாத அளவிற்கு மோசமான சொற்களை பயன்படுத்தி கட்சியின் மாநில தலைமையை விமர்சித்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட ஏ.ஐ.சி.சி பீகார் பொறுப்பாளர் பக்த சரண் தாஸ் நேற்று, மாநிலத்தில் நடந்த கட்சிக் கூட்டத்தில் நடந்த சண்டையைப் பார்த்து நிச்சயம் மிரண்டு போனார்.

மாநிலத்தில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்று உரையாடினார். இந்த கூட்டத்தின் வீடியோ கிளிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன. அதில் உள்ளூர் தலைவர்கள் துஷ்பிரயோகம் செய்வதையும் ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுக்களை எழுப்புவதையும் காணலாம்.

ஆடிட்டோரியத்தின் அரங்கில் அமர்ந்திருந்த தாஸ், மைக்கில், “மாநிலத்தில் கட்சியின் முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக நாங்கள் இங்கு கூடியிருக்கிறோம். தயவுசெய்து தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம்.” எனக் கூறியும் யாரும் அவர் பேசுவதைக் கேட்பதாக இல்லை.

பீகாரை தனது கர்மபூமியாகத்தான் (வேலை செய்யும் இடம்) தான் பார்ப்பதாக செய்தியாளர்களிடம் கூறிய ஒரிசாவில் பிறந்த பக்த சரண் தாஸ், காங்கிரஸ் கட்சியின் பீகார் பொறுப்பாளராக சமீபத்தில் தான் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 4

0

0