முதல்வராக நிதீஷ்குமார், துணை முதல்வராக சுஷில் குமார் மோடி..! சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தேர்வு..!

15 November 2020, 3:04 pm
Nitish_Kumar_UpdateNews360
Quick Share

பாட்னாவில் நடந்த ஒரு முக்கிய கூட்டத்தில் நிதீஷ் குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 15 ஆண்டுகளில் ஏழாவது முறையாக பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார். சுஷில் குமார் மோடி மீண்டும் பீகாரின் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், எச்ஏஎம் மற்றும் விகாஷீல் இன்சான் கட்சி என நான்கு கட்சிகளின் கூட்டணியாகச் செயல்படுகிறது. நிதீஷ் குமார் மற்றும் சுஷில் குமார் மோடி ஆகியோர் முதலமைச்சராகவும் துணை முதல்வராகவும் நாளை பதவியேற்க உள்ளார்கள்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 74 இடங்களைக் கொண்ட பாஜக, ஐக்கிய ஜனதா தளத்தை விட 31 இடங்கள் அதிகம் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், நிதீஷ் குமாரை அடுத்த முதல்வராக உறுதிப்படுத்தியுள்ளது. 

தேர்தல் தொடங்குவதற்கு முன்பே, யார் அதிக இடங்களில் வென்றாலும் ஆளும் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக நிதீஷ் குமாரே இருப்பார் என பாஜக தேசியத் தலைமை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

நிதீஷ் குமார் தனது இல்லத்தில் நடந்த கூட்டத்தின் போது அமைச்சரவை மாற்றங்கள் பற்றி அதிகம் தெரிவிக்கவில்லை என்றாலும், அமைச்சரவையில் ஒவ்வொரு கட்சியினரின் பிரதிநிதித்துவம் மற்றும் புதிய சட்டமன்ற பேச்சாளரைத் தேர்ந்தெடுப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2005 முதல் நீண்ட காலமாக துணை முதல்வராக பதவி வகித்து வரும் மூத்த தலைவர் சுஷில் குமார் மோடியை மாற்றுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், பாஜக ஒரு ஓபிசி அல்லது ஒரு தலித்தை துணை முதல்வராக நியமிக்கக்கூடும் என்ற ஊகம் பரவலாக உள்ளது. இரண்டு தலைவர்கள் துணை முதல்வர் பதவியை கொண்டுள்ள உத்தரப்பிரதேசத்தை பின்பற்றி இதை பீகாரில் செயல்படுத்த பாஜக முயற்சிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 14

0

0

1 thought on “முதல்வராக நிதீஷ்குமார், துணை முதல்வராக சுஷில் குமார் மோடி..! சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக தேர்வு..!

Comments are closed.