30 ஆண்டுகளாக 3 கிமீ கால்வாய்..! தனியொருவராக சாதித்த முதியவர்..! பீகார்வாசிக்கு குவியும் பாராட்டுக்கள்..!

14 September 2020, 8:43 am
Laungi_Bhuiyan_UpdateNews360
Quick Share

பீகாரில் கயாவின் லஹ்துவா பகுதியில் உள்ள கோதில்வா என்ற தனது கிராமத்தின் வயல்களுக்கு, அருகிலுள்ள மலைகளிலிருந்து வரும் மழைநீரை எடுத்துச் செல்ல ஒரு நபர் மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாயை செதுக்கியுள்ளார்.

“கிராமத்தில் உள்ள ஒரு குளத்திற்கு தண்ணீரை எடுத்துச் செல்லும் இந்த கால்வாயை தோண்டி எடுக்க எனக்கு 30 ஆண்டுகள் பிடித்தன” என்று கயாவில் கால்வாயை தனியாக தோண்டிய லாங்கி பூயான் கூறினார்.

“கடந்த 30 ஆண்டுகளாக, எனது கால்நடைகளை வளர்ப்பதற்கும், கால்வாயைத் தோண்டுவதற்கும் நான் அருகிலுள்ள காட்டுக்குச் செல்வேன். இந்த முயற்சியில் யாரும் என்னுடன் சேரவில்லை. கிராமவாசிகள் வாழ்வாதாரம் சம்பாதிக்க நகரங்களுக்குச் செல்கிறார்கள். ஆனால் நான் இங்கேயே இருக்க முடிவு செய்தேன்.” என அவர் மேலும் கூறினார்.

கயா மாவட்ட தலைமையகத்திலிருந்து 80 கி.மீ தூரத்தில் உள்ள கோதில்வா கிராமம் அடர்ந்த காடு மற்றும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. இந்த கிராமம் மாவோயிஸ்டுகளுக்கு அடைக்கலமாக உள்ளது.

கயாவில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தின் முக்கிய வழிமுறைகள் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். மழைக்காலங்களில், மலைகளில் இருந்து விழும் நீர் ஆற்றில் பாய்கிறது. இதுதான் பூயானை சிந்திக்க வைத்தது. அதைத் தொடர்ந்து ஒரு கால்வாயை செதுக்க நினைத்தார்.

“அவர் கடந்த 30 ஆண்டுகளாக கால்வாயை செதுக்கி வருகிறார். அதுவும் ஒற்றை மனிதராக. இது ஏராளமான விலங்குகளுக்கு பயனளிக்கும் மற்றும் வயல்களுக்கும் நீர்ப்பாசனம் செய்யவும் உதவும். அவர் அதை தனது சொந்த நலனுக்காக அல்லாது முழு பகுதிக்கும் செய்கிறார்.” என்று பட்டி மஞ்சி எனும் ஒரு உள்ளூர் நபர் கூறினார்.

கயாவில் வசிக்கும் ஆசிரியர் ராம் விலாஸ் சிங், பூயான் கிராமவாசிகளுக்கும் அவர்களின் வயல்களுக்கும் நன்மை செய்ததற்காக பாராட்டினார். “இதனால் நிறைய பேர் பயனடைவார்கள். அவருடைய வேலையின் காரணமாக மக்கள் இப்போது அவரை அறிந்துகொள்கிறார்கள்.” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 8

0

0