சாலையில் புள்ளிங்கோ சாகசம்: பைக்கில் கையை விட்டதால் இளைஞரின் கால் முறிந்த சோகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 September 2021, 12:11 pm
Bike Race Accident -Updatenews360
Quick Share

கேரளா : திருவனந்தபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் பைக்கில் சாகசம் செய்த இளைஞரின் கால் முறிவு ஏற்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இளைஞர்கள் சிலர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபட்டனர்.

நெய்யாறு அணை சாலையில் எதிர்திசையில் வருபவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக்கில் இளைஞர்கள் சாகசத்தில் ஈடுபட்டனர். சாலையின் குறுக்கோ சாகசம் செய்ய வாலிபர் ஒருவர் தனது பைக்கில் நின்று கொண்டிருந்த போது, எதிரோ புல்லட்டில் வந்த இருவர் நிலைதடுமாறி இளைஞர் மீது மோதினர்.

ஆத்திரத்தில் இந்த இளைஞர் மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் புல்லட் மோதியதில் அந்த இளைஞரின் கால் முறிந்தது. இதையறிந்து அவர்கள் தாக்குதலை நிறுத்திவிட்டு சென்றனர். இதையடுத்து இளைஞரை சக இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

நெய்யாறு அணை சாலையில் இளைஞர்கள் தொடர்ந்து இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது. இதனிடையே இளைஞர்கள் சாகசம் செய்து விபத்தை ஏற்படுத்திய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Views: - 202

0

0