பள்ளி ஆசிரியைக்கு பிறந்தநாள் பரிசாக வந்த உள்ளாடைகள் : வீட்டு உரிமையாளர் அளித்த GIFTஆல் ஷாக்.. உடனே எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2022, 2:39 pm
Bday Gift- Updatenews360
Quick Share

பெங்களூர் : பள்ளி ஆசிரியை பிறந்தநாளுக்கு வீட்டு உரிமையாளர் உள்ளாடைகளை பரிசாக கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தெற்கு பெங்களூருவில் உள்ள ஸ்ரீநகரை சேர்ந்தவர் பத்மநாபன். இவருக்கு சொந்தமான வீடடில் 12 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஒருவர் குடியிருந்த வருகிறார்.

அவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அனுமந்தநகர் காவல் நிலையத்தில் பள்ளி ஆசிரியை வீட்டு உரிமையாளர் குறித்து ஒரு புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், பத்மநாபன் வீட்டில் 12 வருடமாக குடியிருந்து வருகிறேன், கடந்த ஆண்டு என் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்காக அப்பகுதியில் உள்ளவர்களுக்கும், வீட்டு உரிமையாளர் என்ற முறையில் பத்மநாபனுக்கு அழைப்பு விடுத்திருந்தேன்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மற்றவர்கள் போல பத்மநாபனும் தனக்கு பரிசை வழங்கினார். இதையடுத்து விழா முடிந்ததும், பரிசுகளை திறந்து பார்த்தேன். அதில் பத்மநாபன் வழங்கிய பரிசு பொருளில் பிரித்து பார்த்த போது எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அதில் உள்ளாடைகள் இருந்தது. அன்று இரவே எனக்கு போன் பண்ணி தகாத வார்த்தைகளால் பேசி எனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருகிறார். தன்னுடன் வந்து தங்க வேண்டும் என்றும், தான் கொடுத்த உள்ளாடைகளை அணிந்து காண்பிக்க வேண்டும் என தொல்லை கொடுத்து வருகிறார்.

மேலும் ஆபாசமாக பேசுவதாகவும், இதை வெளியில் சொன்னால் என் வீட்டை காலி செய்யுமாறு கூறுகிறார். அதே போல கடந்த 11ம் தேதி என் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி நான் தங்கியிருந்த கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டார் என்றும் ஆசிரியை புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரை பெற்ற போலீசார், உடனே பத்மநாபனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது என் மீது ஆசிரியை பொய் புகார் அளித்ததாகவும், தான் வீட்டை காலி செய்ய சொன்னதால் இந்த பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 441

0

0