I.N.D.I.A. கூட்டணிக்கு ஷாக் கொடுத்த பாஜக… பிளான் போட்டு முந்திய அமித்ஷா : முக்கியத்துவம் வாய்ந்த மீட்டிங்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2023, 9:42 pm
Amithsha - Updatenews360
Quick Share

குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்து பேசினார். குடியரசுத்தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

மரியாதை நிமித்தமாக குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியதாக ராஷ்டிரபதி பவன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள் நாளை குடியரசுத்தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். இந்த சந்திப்பின் போது மணிப்பூர் விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் குடியரசுத்தலைவரிடம் மனு அளிக்க உள்ளன.

மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறாதது குறித்து முறையிடவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. முன்னதாக மணிப்பூருக்கு, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் எம்பிக்கள் நேரடியாகவே சென்றனர்.

மணிப்பூருக்கு 2 நாள் பயணமாக 21 பேர் கொண்ட எம்.பிக்கள் குழு டெல்லியில் இருந்து மணிப்பூருக்கு சென்று அங்குள்ள மக்களை சந்தித்து நேரடியாக கள நிலவரத்தை அறிந்து கொண்டது.

அதன்பிறகு குடியரசுத்தலைவரை சந்தித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அதன்படி நாளை சந்திக்க திட்டமிட்டு இருக்கும் நிலையில், இன்று அமித்ஷா குடியரசுத்தலைவரை சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Views: - 285

0

0