ஒருமுறை அல்ல 5வது முறையாக நாக் அவுட் செய்த பாஜக.. அதிர்ச்சியில் காங்கிரஸ் : 2024ல் மீண்டும் மோடி?!

Author: Udayachandran RadhaKrishnan
3 December 2023, 11:25 am
rahul vs modi
Quick Share

ஒருமுறை அல்ல 5வது முறையாக நாக் அவுட் செய்த பாஜக.. அதிர்ச்சியில் காங்கிரஸ் : 2024ல் மீண்டும் மோடி?!

மத்திய பிரதேசத்தில் 230 இடங்கள் உள்ளன. இதில் மெஜாரிட்டி பெற 116 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜக தற்போது 138 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 89 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை நிஜமாகும் விதமாக மத்திய பிரதேசத்தில் பாஜக அமோக முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 4 முறையாக அங்கே பாஜகதான் ஆட்சி செய்து வருகிறது. 3 முறையாக வரிசையாக அங்கே 2005ல் இருந்து 2013 வரை அங்கே பாஜக ஆட்சி செய்தது. சிவராஜ் சிங் சவுகான் அங்கே ஆட்சி அமைத்தார். அதன்பின் கடந்த தேர்தலில் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. ஆனால் 1 வருடத்தில் அங்கே கமல்நாத் ஆட்சியை ஜோதிராதித்யா சிந்தியா கவிழ்த்தார். இவர் பாஜகவில் இணைந்து தன்னுடன் சில எம்எல்ஏக்களையும் அழைத்து சென்று ஆட்சியை கவிழ்த்தார். இதன்பின் வந்த இடைத்தேர்தலில் பாஜக கூடுதல் எம்எல்ஏக்களை மீண்டும் சிவராஜ் சிங் சவுகான் ஆட்சிக்கு வந்தார்.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 114, பாஜக 109 இடங்களில் வென்றது. அதன்பின் 1 வருடத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிந்தியா தலைமையில் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் பாஜக 19 இடங்களில் வென்றது.

இதன் மூலம் 128 இடங்கள் என்று மெஜாரிட்டி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தது. இதன் மூலம் அங்கே 5வது முறையாக பாஜக ஆட்சிக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இன்னொரு பக்கம் ராஜஸ்தானிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. கணிப்புகளில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறப்பட்டாலும், கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரசை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை பெற்றுள்ளது. அங்கே 200 இடங்களில் மெஜாரிட்டி பெற 101 இடங்களில் வெல்ல வேண்டும். பாஜக 107 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 80 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

வட மாநிலங்களில் இப்போதும் பாஜகதான் கிங் என்பதை நிரூபிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த தேர்தல் முடிவுகள் முக்கியமான ஒரு கேள்வியை.. விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் – மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது.

இதையடுத்து தற்போது 5 மாநில தேர்தல் முடிவுகள் அதற்கு வரப்போகும் டீசர் போல பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 2 முக்கியமான வடஇந்திய மாநிலங்கள்.. இந்தி மாநிலங்கள் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் இன்னமும் மோடி மேஜிக், அலை உள்ளது தெளிவாகிறது. மோடிதான் அங்கே இப்போதும் கிங் என்பது தேர்தல் முன்னணி நிலவரங்கள் காட்டுகிறது. இதனால் 2024ல் மீண்டும் மோடி ரிட்டர்ன்ஸ் இருக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Views: - 177

0

0