கொரோனா ஊரடங்கு..! தினசரி 5 கோடி பேருக்கு உணவு..! பாஜக அதிரடி முடிவு..!

25 March 2020, 10:50 pm
JP_Nadda_UpdateNews360
Quick Share

பாரதிய கட்சியின் தேசிய அலுவலர்களுடன் பாரதீய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவின் சந்திப்பில், 21 நாள் ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும் 5 கோடி ஏழை மக்களுக்கு கட்சித் தொழிலாளர்கள் உணவளிப்பார்கள் என்று முடிவு செய்யப்பட்டது. 

கொரோனா வைரஸ் பரவல் உலகம் முழுவதும் தீவிரமாகி வரும் நிலையில், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பலி  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிறன்று மோடி ஜனதா ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து படிப்படியாக அனைத்து மாநிலங்களும் மார்ச் 31 வரை ஊரடங்கை அறிவித்தது.

இதையடுத்து நேற்று இரவு நாடு மக்களுக்கு மோடி ஆற்றிய உறையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 21 நாள் தேசிய ஊரடங்கை அறிவித்தார். இந்த தேசிய ஊரடங்கால் நாட்டில் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்த எதுவும் இயங்காது.

இதனால் ஏழை எளியவர்கள் பாதிக்கடுவ அவர்கள் என்பதால் அந்தந்த மாநில அரசுகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார்.

பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா கட்சி தலைவர்களுடனான கூட்டத்தில், ஊரடங்கின் போது ஒவ்வொரு கட்சி ஊழியரும் 5 ஏழை மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதுது. 

கட்சியின் தேசிய அலுவலர்கள் தினசரி வீடியோ மாநாட்டு கூட்டங்கள் மூலம் இந்த திட்டத்தை மதிப்பாய்வு செய்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.