புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்யசபா எம்பி கொரோனாவால் மரணம்..! தலைவர்கள் அதிர்ச்சி..!
17 September 2020, 5:26 pmமாநிலங்களவை எம்.பி.யும், கர்நாடக பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான அசோக் காஸ்தி இன்று காலமானார். கொரோனா வைரஸ் தொற்று உறுதியான பின்னர் அவர் மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக இந்த ஆண்டு ஜூலை 22’ஆம் தேதி பாஜக தலைவர் அசோக் காஸ்தி மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றிருந்தார்.
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அசோக் காஸ்தி செப்டம்பர் 2’ஆம் தேதி பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக அவர் சுவாசப் பிரச்சினையால் அவதிப்பட்டு வருவதாகவும், வென்டிலேட்டர் ஆதரவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் வேறு சில வியாதிகளாலும் அவதிப்பட்டு வந்த அவர் இன்று மரணமடைந்தார்.
2012’ல் கர்நாடக பிற்படுத்தப்போட்டோர் ஆணையத்தின் தலைவராக அசோக் காஸ்தி பணியாற்றியுள்ளார்.
கர்நாடகாவின் ரைச்சூர் மாவட்டத்தில் பாஜகவை எழுச்சியுறச் செய்த பெருமைக்குரியவர் அசோக் காஸ்தி. ராஷ்டிரிய சுயம்சேவ சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினரான இவர், அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) செயல்பாட்டாளராக செயற்பட்டுள்ளார். அவர் 18 வயதாக இருந்தபோது பாஜகவில் சேர்ந்தார் மற்றும் கர்நாடக பாஜகவின் யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.