பீகாரிலும் லவ் ஜிகாத்துக்கு எதிராக சிறப்புச் சட்டம்..! மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் வலியுறுத்தல்..!

22 November 2020, 10:40 am
Giriraj_Singh_Nitish_Kumar_UpdateNews360
Quick Share

பீகார் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், பீகாரில் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

லவ் ஜிகாத் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளை உணருமாறு, கிரிராஜ் சிங் முதலமைச்சர் நிதீஷ்குமாரை கேட்டுக்கொண்டார். லவ் ஜிகாத்துக்கும் வகுப்புவாதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார்.

இது நாட்டில் ஒரு அச்சுறுத்தலாக மாறிவிட்டது என்று கூறிய கிரிராஜ், “பீகார் அரசு லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தினால் அது ஒரு சிறந்த முயற்சியாக இருக்கும். இதைச் செய்ய நான் முதல்வர் நிதீஷ் குமாரிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றார். 

மேலும் “பீகாரில் இதற்காக ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் அது சமூக நல்லிணக்கத்தை பராமரிக்க உதவும்” என்று அவர் மேலும் கூறினார்.

“லவ் ஜிகாத் இந்து சமூகத்தை மட்டுமல்ல. அது நம் நாட்டில் சிறுபான்மை சமூகங்களையும் பாதிக்கிறது. கேரளாவில், கிறிஸ்தவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களும் கவலைப்படுகிறார்கள். அது குறித்து கவலைகளை எழுப்புகிறார்கள். சிரியன்-மலபார் தேவாலயத்தின் அறிக்கை ஒன்று கிறிஸ்தவ சிறுமிகளும் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக்காட்டியது.” என கிரிராஜ் சிங் தெரிவித்தார்.

லவ் ஜிகாத் என்ற பெயரில் கிறிஸ்தவ சிறுமிகள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவதாக சிரியன்-மலபார் தேவாலயத்தின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் அவரது கருத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய பிரதேசம், ஹரியானா, கர்நாடகா மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள பாஜக அரசுகள் லவ் ஜிகாத் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு சட்டத்தை கொண்டு வருவதாக அறிவித்துள்ள நிலையில், தற்போது பாஜக அமைச்சரின் கோரிக்கையை நிதீஷ்குமார் ஏற்பாரா என பீகார் அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.

Views: - 23

0

0