உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: பாரதிய ஜனதா தலைவர் சுட்டுக்கொலை…!!

17 October 2020, 1:13 pm
up bjp death - updatenews360
Quick Share

பிரோசாபாத்: உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் பாரதிய ஜனதா தலைவர் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் பிரோசாபாத்தில் உள்ள நர்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி உள்ளூர் பா.ஜ.க தலைவர் டி.கே. குப்தா. இவர் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குப்தாவை சுட்டுக்கொன்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.