கர்நாடகாவில் மீண்டும் தாமரை மலருகிறது? தப்புகிறார் எடியூரப்பா? எக்சிட் போல் முடிவுகள்

5 December 2019, 9:34 pm
Quick Share

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. முடிவுகளுக்காக பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் காத்திருக்கின்றன.

இந் நிலையில் தேர்தலுக்கு பிந்தய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. பல முன்னணி தொலைக்காட்சிகள் இந்த கருத்து கணிப்பை நடத்தி இருக்கின்றன.

அதில் மீண்டும் பாஜகவே ஆட்சியில் அமரும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிய வந்திருக்கிறது. பாஜக குறைந்தது 8 தொகுதிகளிலும், அதிகபட்சமாக 12 தொகுதிகள் வரை வெல்லும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசுக்கு குறைந்தது 3ம், அதிகபட்சமாக 6 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதாதளத்துக்கு ஒன்றோ அல்லது இரண்டோ கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியை தக்க 6 தொகுதிகளில் வென்றாலே போதும். ஆனால், 12 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் கூறி உள்ளதால் பாஜக குஷியாகி இருக்கிறது.