விவசாயிகள் பிரச்சினையை கண்டுகொள்ளாத ஒடிசா அரசு..! சட்டசபையிலேயே தற்கொலைக்கு முயன்ற பாஜக எம்எல்ஏ..!

Author: Sekar
12 March 2021, 8:41 pm
odisha_assembly_Updatenews360
Quick Share

மாநிலத்தில் நெல் கொள்முதல் பிரச்சினைகள் தொடர்பாக ஒடிசா சட்டமன்றத்தில் சானிட்டைசரை உட்கொண்டு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார்.

உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ரனேந்திர பிரதாப் ஸ்வைன் நெல் கொள்முதல் பிரச்சினைகள் குறித்து சபைக்கு பதிலளித்தபோது, தியோகர் தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. சுபாஷ் சந்திர பனிகிராஹி, சானிட்டைசரை எதிர்ப்பின் அடையாளமாக உட்கொள்ள முயன்றார்.

சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிக்ரம் கேஷரி அருகா மற்றும் பிற சட்டமன்ற உறுப்பினர்கள் பனிகிராஹி சானிட்டைசர் உட்கொள்வதைத் தடுத்து, சானிட்டைசரை அவரிடமிருந்து மீட்டனர்.

“மாநில அரசு எனக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் கைவிட்டதால், வேறு வழியின்றி நான் சானிட்டைசரை உட்கொள்ள முயற்சித்தேன். விவசாயிகளின் பிரச்சினை சபையில் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டாலும், விவசாயிகளின் அவல நிலைக்கு மாநில அரசு செவிசாய்க்கவில்லை” என்று பானிகிராஹி ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

விவசாயிகளின் பிரச்சினைகளை மண்டி மற்றும் டோக்கன் முறை போன்றவற்றில் தீர்க்க அரசாங்கம் தவறிவிட்டதாக பனிகிராஹி குற்றம் சாட்டினார். முன்னதாக, அவர், மாநில அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக தற்கொலை செய்து கொள்வதாக அச்சுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் அமர்வின் முதல் கட்டத்தின்போது, அவர் சபையில் ஒரு போராட்டத்தை நடத்தினார். மேலும் அனைத்து நெல் விவசாயிகளிடமிருந்தும் விரைவாக கொள்முதல் செய்யப்படாவிட்டால் தீக்குளிப்பதாக அச்சுறுத்தியிருந்தார்.

Views: - 74

0

0