பீகாரில் பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்..! கூட்டணிக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மீது பரபரப்புக் குற்றச்சாட்டு..!

3 November 2020, 11:05 am
Bjp Mla Mithilesh Tiwari_Updatenews360
Quick Share

பீகார் பைகுந்த்பூரைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ மிதிலேஷ் திவாரி கோபால்கஞ்சில் நேற்று மோட்டார் சைக்கிளில் வந்த 50 பேரால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மேலும் எம்எல்ஏவின் காரையும் சூறையாடினர். 

தாக்குதல் நடத்தியவர்கள் சுயேட்சை வேட்பாளர் மற்றும் முன்னாள் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏவான மஞ்சீத் சிங் ஆகியோரின் ஆதரவாளர்கள் என்று குற்றம் சாட்டி மிதிலேஷ் திவாரி காவல் நிலையத்திற்கு வெளியே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பதில் பாகுபாடு காட்டுவதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

இந்த தாக்குதலில் மொத்தம் ஐந்து பாஜக எம்எல்ஏக்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

“சுயேட்சை வேட்பாளர் மஞ்சீத் சிங்கின் ஆட்கள் மக்களிடையே பணம் மற்றும் புடவைகளை விநியோகித்து வருவதாக செய்திகள் வந்தன. இது தொடர்பாக எங்கள் கட்சியினரிடம் பேசிக் கொண்டிருந்தபோது மஞ்சீத் சிங்கின் ஆதரவாளர்கள் 50 பைக் மூலம் வந்து என்னைத் தாக்கினர். அவர்கள் கைது செய்யப்படும் வரை இங்கிருந்து நகர மாட்டேன்.” என உள்ளிருப்பு போராட்டத்தின் போது மிதிலேஷ் திவாரி கூறினார்.

முதல்வர் நிதீஷ்குமாருடன் மஞ்சீத் சிங் நெருக்கமாக இருந்து வருகிறார் என்றும் அதனால்தான் அவருக்கு எதிராக நிர்வாகம் செயல்படவில்லை என்றும் பாஜக எம்.எல்.ஏ மேலும் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக எம்எல்ஏ ஒருவர் தாக்கப்பட்ட இந்த சம்பவம், இரண்டாம் கட்ட சட்டசபைத் தேர்தல் இன்று நடக்க உள்ள பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 26

0

0

1 thought on “பீகாரில் பாஜக எம்எல்ஏ மீது தாக்குதல்..! கூட்டணிக் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ மீது பரபரப்புக் குற்றச்சாட்டு..!

Comments are closed.