பாகிஸ்தான் எண்ணிலிருந்தது கொலை மிரட்டல்..! போலீசில் புகார் அளித்த பாஜக எம்பி சாக்ஷி மகராஜ்..!

11 August 2020, 3:18 pm
sakshi_maharaj_unnao_updatenews360
Quick Share

குண்டு வெடிப்பில் மூலம் தன்னை கொலை செய்வதாக, பாகிஸ்தான் எண்ணில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகக் கூறி பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சதர் கோட்வாலி இன்ஸ்பெக்டர் தினேஷ் சந்திர மிஸ்ராவுக்கு அளித்த புகாரில், உன்னாவோவைச் சேர்ந்த மக்களவை எம்.பி. சாக்ஷி மகராஜ், பாகிஸ்தானின் ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து தனக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் கூறினார்.

தனது புகாரில் அவர் மேலும், அழைப்பாளர் காஷ்மீர் விரைவில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்றும், அயோத்தியில் நடந்த அயோத்தியில் கடந்த வாரம் நடந்த ராமர் கோவில் பூமி பூஜையை கொச்சைப்படுத்தும் விதமாகப் பேசியதாகவும் தெரிவித்தார்.

முஜாஹிதீன்கள் தன்னை தீவிரமாக கண்காணித்து வருவதாகக் கூறிய சாக்ஷி மகராஜ், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் தொலைபேசியில் அழைத்தவர் கொச்சைப்படுத்தும் விதமாக பேசியதாகவும் தெரிவித்தார்.

தனது உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்.பி. மகராஜ் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். புகாரின் பேரில், போலீஸ் சூப்பிரண்டு ரோஹன் பி கனய், காவல் அதிகாரி யாதவேந்திர யாதவ் மற்றும் கொட்வாலி காவல்துறை பொறுப்பாளர்களுக்கு இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தவும் கண்காணிப்புக் குழுக்களின் உதவியைப் பெறுமாறும் உத்தரவிட்டார்.

முன்னதாக உயிருக்கு அச்சறுத்தல் இருக்கும் காரணத்தினால் எம்.பி. சாக்ஷி மகராஜுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது இல்லத்தில் காவல்துறையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

எனினும் தொலைபேசி அச்சுறுத்தல் சாக்ஷி மகராஜுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து மாரு ஆய்வு செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

Views: - 27

0

0