பாஜக துணைத்தலைவர் அப்துல்லா குட்டி வாகனம் மீது தாக்குதல்..! திட்டமிட்ட சதியா..? கேரள போலீஸ் விசாரணை..!

By: Sekar
9 October 2020, 1:28 pm
Kerala_BJP_Vice_President_Abdullah_Kutty_Car_accident_UpdateNews360
Quick Share

பாஜக தேசிய துணைத் தலைவர் ஏ.பி.அப்துல்லா குட்டியின் கார் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்குச் சென்று கொண்டிருந்தபோது நேற்று இரவு மலப்புரத்தில் லாரி மோதியது. இந்நிலையில் இது சாதாரண விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அபுதுல்லா குட்டி சமீபத்தில் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் இந்த தாக்குதல் திட்டமிட்ட சதி என்று ஊகிக்கப்படுகிறது. நேற்று இரவு மலப்புரத்தில் உள்ள ரண்டதானியில் அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு தேநீர் கடையில் தனது வாகனத்தை நிறுத்தியபோது ஆரம்பத்தில் அவரை ஆறு பேர் குறிவைத்தனர் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர், அவரது வாகனம் மற்றொரு வாகனத்தால் துரத்தப்பட்டு ஒரு லாரி மீது மோதியது. இதில் அப்துல்லா குட்டி காயமின்றி தப்பினார்.

“எங்கள் காரைத் துரத்திய இரண்டு வாகனங்கள் பின்னர் எங்கள் வாகனத்தில் மோதியது. இருப்பினும், நாங்கள் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டோம். ஆரம்பத்தில் நாங்கள் ஒரு உணவகத்தில் நிறுத்தப்பட்டபோது சிலர் எங்களிடம் தேவையில்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் எங்கள் வாகனம் குறிவைக்கப்பட்டது. நான் புகார் அளித்தேன்.” என அப்துல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இதில் அப்துல்லா குட்டிக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. “கல்பகஞ்சேரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடந்து வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

Views: - 51

0

0