வாய்ப்பை கொடுக்க மறுத்த பாஜக.. காங்கிரஸ் கட்சிக்கு வரும் வருண்..? உணர்ச்சி பொங்க கடிதம் எழுதிய உ.பி. எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
28 March 2024, 4:28 pm
varun
Quick Share

வாய்ப்பை கொடுக்க மறுத்த பாஜக.. காங்கிரஸ் கட்சிக்கு வரும் வருண்..? உணர்ச்சி பொங்க கடிதம் எழுதிய உ.பி. எம்பி!!

உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் தொகுதியின் சிட்டிங் எம்பியான வருண் காந்திக்கு இந்த முறை போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுக்கவில்லை. இது சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல் வெளியானது. இதில் சிட்டிங் எம்பியாக உள்ள 37 எம்பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டிருந்தது.

இந்த 37 பேரில் வருண் காந்தியும் ஒருவர். ஆனால், இவருடைய தாய் மேனகா காந்திக்கு மீண்டும் சுல்தான்பூரில் தொகுதியை பாஜக ஒதுக்கியிருக்கிறது. வருணுக்கு சீட் ஒதுக்காததால் அவர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிக்கு தாவிவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், மேனா காந்திக்கு சீட் கொடுத்து வருணை பாஜக சமாதானம் செய்திருக்கிறது.

இந்நிலையில் தனது நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பயணம் நிறைவடைந்தது என வருண் காந்தி உணர்ச்சி பொங்க கடிதம் எழுதி அதை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “பிலிபித் எம்பியாக என்னுடைய பதவி காலம் முடிவுக்கு வந்தாலும், இந்த தொகுதிக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை என் இறுதி மூச்சு உள்ளவரை தொடரும். இந்த தொகுதி மக்களுக்கு சேவையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை அதிர்ஷடமாக கருதுகிறேன்.

பிலிபித் மக்களின் பிரதிநிதியாக இருந்தது எனது வாழ்க்கையின் கவுரம். எனவே என்னால் முடிந்தவரை தொகுதி மக்களின் நலனுக்காக அவர்களுடன் நிற்பேன்.

எம்.பி.யாக இல்லாவிட்டாலும், ஒரு மகனாக, என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு சேவை செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன், என் கதவுகள் உனக்காக எப்போதும் திறந்தே இருக்கும். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது எனக்கு 3 வயது இருக்கும். 1983ல் எனது தாய் மேனகா காந்தியுடன் நான் இங்கு வந்தேன்.

ஒரு நாள் இந்த நிலம் என்னுடைய பணியிடமாக மாறும், இங்குள்ள மக்கள் என்னுடைய குடும்பமாக மாறுவார்கள் என்று அவனுக்கு எப்படித் தெரியும்? பிலிபித்துக்கும் எனக்கும் இடையிலான உறவு அன்பும் நம்பிக்கையும் கொண்டது. இந்த உறவு அரசியல் உறவுகளுக்கு அப்பாற்பட்டது. நான் இருந்தேன், இருக்கிறேன், இனியும் இருப்பேன்” என்று உணர்ச்சிப்பொங்க தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 128

0

0