மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு..! ஆளும் திரிணாமுல் கட்சியின் கைவரிசை..?

13 September 2020, 7:09 pm
Tree_hanged_Death_UpdateNews360
Quick Share

மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தில் இன்று பாஜக தொண்டர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாஜக தொண்டர் கணேஷ் ராய், ஹூக்லி மாவட்டத்தின் கானாட்டியில் உள்ள தனது கிராமத்திற்கு அருகே ஒரு மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களால் அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

மேற்கு வங்கத்தின் ஹூக்லி மாவட்டத்தின் கானாட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கணேஷ் ராய். பாஜக தொண்டரான இவர் நேற்று மாலை முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து கணேஷ் ராயை அவரது குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் இருக்கு காலை அவர் சடலமாக மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில் அவரது மரணத்தின் பின்னணியில் உள்ள சூழ்நிலைகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், கணேஷ் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் கொலை செய்யப்பட்டார் என்றும் பின்னர் அவரது உடல் நள்ளிரவில் மரத்திலிருந்து தூக்கிலிடப்பட்டார் என்று குற்றம் சாட்டினார்.

“பாஜக தொண்டர்களை கொன்று தூக்கிலிடுவது ஒரு புதிய கலாச்சாரமாக திரிணாமுல் ஆட்சியில் மாறிவிட்டது. ஆனால் நாங்கள் ஒரு வலுவான எதிர்ப்பைத் தொடங்குவோம். பாஜகவுக்கு பெருகிவரும் ஆதரவைப் பற்றி அஞ்சும் திரிணாமுல் கட்சி, பாஜக ஆதரவாளர்களை பயமுறுத்த இது போன்ற குற்றங்களில் ஈடுபடுகிறது” என்று அவர் கூறினார்.

எனினும் கணேஷ் ராய் மரணத்தில் தங்கள் கட்சி உறுப்பினர்கள் ஈடுபடவில்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.

ஹூக்லியின் பாஜக எம்.பி. லாக்கெட் சாட்டர்ஜி, “இந்த மிருகத்தனத்தை நிறுத்த வேண்டும். ஜனநாயகத்தின் சாம்பியன்கள் எங்கே, மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்படுவது தொடரும் நிலையில் அது குறித்து அவர்கள் ஏன் மௌனமாக இருக்கிறார்கள்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார். 

முன்னதாக ஜூலை 28 அன்று, கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ஹால்டியாவில் ஒரு பாஜக தலைவரின் உடலும் சடலமாக தொங்கிய நிலையில் காணப்பட்டது.

அந்த சம்பவத்திற்கு முன்னர், பாஜக தலைவரும், ஹெம்தாபாத் எம்எல்ஏவுமான தேபேந்திர நாத் ரேயின் சடலமும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில், பல பாஜக தொண்டர்களின் சடலங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பாஜக பெற்று வரும் அபரிமிதமான வளர்ச்சி, வரும் சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் கட்சிக்கு ஆபத்தாக முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், திரிணாமுல் கட்சி திட்டமிட்டு பாஜகவினரை கொலை செய்து அவர்களிடையே பயத்தை ஏற்படுத்த முனைவதாக பேசப்படுகிறது.

Views: - 7

0

0