மேற்குவங்க பாஜக தொண்டர் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை..! ஒரே மாதத்தில் மூன்றாவது சம்பவம்..!

1 November 2020, 5:27 pm
Death_UpdateNews360
Quick Share

மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இன்று பாஜக தொண்டர் ஒருவரின் சடலம் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடியா மாவட்டத்தில் கயேஷ்பூர் நகரில் வசிக்கும் பிஜோய் ஷில் எனும் 34 வயதான நபர் பாஜகவின் தீவிர உறுப்பினராக இருந்தார்.

காவல்துறையினர் பிஜோய் ஷிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு காரணம் திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் தான் என்று பாஜக குற்றம் சாட்டியது. மேலும் பாஜக கொலை செய்யப்பட்ட அனைத்து தொண்டர்களுக்கும் நீதியை உறுதி செய்யும் என்று கூறியது.

“ஒரு தீவிர பாஜக தொண்டரான பிஜோய் ஷில் நாடியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குண்டர்கள் பாஜக தொண்டர்களின் ஒவ்வொரு கொலையிலும் இதே முறையையே பின்பற்றி வருகிறார்.

பாஜகவின் செயல்பாட்டை நிறுத்த பயங்கரவாதத்தைப் பயன்படுத்தலாமா? நாங்கள் நிறுத்த மாட்டோம், கொலை செய்யப்பட்ட அனைத்து தொண்டர்களுக்கும் பாஜக நீதியை உறுதி செய்யும்! இந்த அரசியல் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.” என்று மேற்குவங்க பாஜக ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே பாஜக தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாகிவிட்டது என்று கூறியதுடன், இந்த விஷயத்தை ஆராயுமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.

பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன், பாஜக தொண்டரின் கொலைக்கு பின்னால் திரிணாமுல் காங்கிரஸின் கை இருப்பதாக குற்றம் சாட்டினார்.

கடந்த ஒரு மாத காலப்பகுதியில் இதுபோன்ற மூன்றாவது சம்பவம் இதுவாகும். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதாக பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

Views: - 34

0

0

1 thought on “மேற்குவங்க பாஜக தொண்டர் தூக்கில் தொங்கவிடப்பட்டு கொலை..! ஒரே மாதத்தில் மூன்றாவது சம்பவம்..!

Comments are closed.