கரும்பூஞ்சை நோய்க்கு மகாராஷ்டிராவில் 729 பேர் பலி: சுகாதாரத்துறை தகவல்..!!

21 June 2021, 4:50 pm
Quick Share

நாக்பூர்: மஹாராஷ்டிராவில் கரும்பூஞ்சை நோய்க்கு 729 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா பெருந்தொற்றின் 2வது அலையில் நோய்த் தொற்றிலிருந்து மீண்டவர்களை ‘மியூகோர்மைகோசிஸ்’ என்ற கரும்பூஞ்சை பாதிக்கிறது. கொரோனா முதல் அலையில் இல்லாத கரும்பூஞ்சை 2வது அலையில் அதிகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது.

மஹாராஷ்டிரா சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மஹாராஷ்டிராவில் ஜூன் 19ம் தேதி காலை 11:00 மணி வரை, மொத்தம் 7,998 பேர் கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில், 729 பேர் பலியாகி உள்ளனர். தற்போது 4,398 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக நாக்பூர் மாவட்டத்தில் 104 பேரும், புனேவில் 90 பேரும், ஒவுரங்காபாத்தில் 75 பேரும் கரும்பூஞ்சைக்கு உயிரிழந்து உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 177

0

0