ராட்சத அலையில் சிக்கிய படகு : கடலில் தத்தளித்த மீனவர்கள்.. 4 மணி நேரம் போராடி உயிருடன் மீட்பு!!

24 June 2021, 5:05 pm
Fisherman Rescue - Updatenews360
Quick Share

ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள உப்பாடா அருகே கடலில் அலை இழுத்து சென்ற மீன்பிடி படகில் சிக்கித் தவித்த மீனவர்களை 4 மணி நேரம் போராடி மற்ற மீனவர்கள் மீட்டனர்.

உப்பாடா பகுதியை சேர்ந்த மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன்பிடித்து திரும்பி வந்து கொண்டிருந்தனர் .உப்பாடவில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது கடலில் எழுந்த ராட்சத அலை மீன்பிடி படகு ஒன்று மீது மோதியது.

இதனால் கடலில் கவிழ்ந்த படகில் இருந்த 6 மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த படகின் மீது ஏறி உதவிக்காக காத்திருந்தனர். இதனை கவனித்த மற்ற மீனவர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தத்தளித்த மீனவர்கள் ஆறு பேரையும் மீட்டனர். சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களுடன் அந்த படகு கடலில் மூழ்கியது.

Views: - 132

0

0