ஜம்மு – காஷ்மீரில் மாயமான 2 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்பு

Author: Udhayakumar Raman
16 October 2021, 11:06 pm
JK Attack - updatenews360
Quick Share

ஜம்மு – காஷ்மீரில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, மாயமான இரண்டு ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெறுகிறது. கடந்த திங்கட்கிழமை கடந்த துப்பாக்கி சண்டையில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின்னர் வியாழக்கிழமை நடந்த சண்டையில் 2 வீரர்கள் உயிரிழந்த நிலையில், 2 வீரர்களை காணவில்லை. இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தினர். ஆறாவது நாளாக இன்றும் அந்த தேடுதல் வேட்டை தொடர்ந்தது. அப்போது, மாயமான இரண்டு வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

Views: - 126

0

0