நகருக்குள் நுழைய ஏஎம்யு மாணவருக்கு ஆறு மாதம் தடை..! சிஏஏ வன்முறை வழக்கில் அலிகார் நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

30 January 2021, 8:26 pm
Aligarh_Muslim_University_UpdateNews360
Quick Share

பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட ஒரு வருடம் கழித்து, நகரத்தில் அமைதிக்கு அச்சுறுத்தல் என்று கூறி, அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர் தலைவர் ஆரிஃப் கான் தியாகியை மாவட்டத்தில் நுழைய ஆறு மாதங்களுக்கு அலிகார் நிர்வாகம் தடை செய்துள்ளது.

2019 டிசம்பர் 15’ஆம் தேதி தொடங்கிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வளாகத்தில் நடந்த போராட்டங்கள் தொடர்பாக வெளியேற்றும் உத்தரவை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் பேராசிரியர் ஷஃபே கிட்வாய் தெரிவித்தார்.

உத்தரபிரதேச குண்டாஸ் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் குமார் மல்பானி கடந்த வாரம் ஆரிஃப் கானுக்கு இந்த உத்தரவை அனுப்பியுள்ளார். அதை இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் பெற்றார்.

ஆரிஃப் நகரின் அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும், அவரது இருப்பு அமைதியை விரும்பும் நகரின் குடியிருப்பாளர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
2019 டிசம்பர் மற்றும் 2020 ஜனவரி மாதங்களில் வளாகத்தில் சிஏஏ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் இரண்டு மாதங்களில் ஆரிஃப் மீது அரை டஜன் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர், ஆரிஃப் ஊடகவியலாளர்களிடம், அவர் மீதான வழக்குகள் அனைத்தும் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தொடர்பானவை என்று கூறினார். விவசாயிகள், தொழிற்சங்க உறுப்பினர்கள் அல்லது மாணவர்கள் என அனைத்து குடிமக்களுக்கும் அமைதியான போராட்டத்திற்கு உரிமை உண்டு என்றார்.

வெளியேற்றும் உத்தரவு கருத்து சுதந்திரத்தை மூடிமறைக்க மற்றொரு முயற்சியாகும் என்று அவர் கூறினார். இந்த உத்தரவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அலிகார் பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் கிட்வாய், 2019 டிசம்பர் 15’ஆம் தேதி இரவு நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததாகக் கூறினார். பல்கலைக்கழகம் தனியாக எந்தவொரு புகாரையும் பதிவு செய்யவில்லை என்று அவர் கூறினார்.

முன்னதாக டிசம்பர் 15’ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இதில் மாணவர்கள், பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் காவல்துறை ஊழியர்கள் உட்பட 70’க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மோதல்களைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் காலவரையற்ற விடுமுறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0