வெள்ளப்பெருக்கில் உடைந்து விழுந்த பாலம்: நூலிழையில் உயிர்தப்பிய ஓட்டுநர்…அதிர்ச்சி வீடியோ..!!
Author: Aarthi Sivakumar27 August 2021, 6:40 pm
உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பாலத்தில் சிக்கிக்கொண்ட வாகன ஓட்டிகள் தப்பி ஓடிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்டில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் டேராடூனில் உள்ள ஜகான் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக ராணிபோஹரியில் இருந்து ரிஷிகேஷ் செல்லும் சாலையில் உள்ள பாலத்தின் ஒருபகுதி திடீரென உடைந்து விழுந்தது.
இடிந்து விழுந்த பாலத்தில் 2 சரக்கு வாகனங்கள் சிக்கிக்கொண்ட நிலையில், ஓட்டுநர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்தில் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
0
0