எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்..! பி.எஸ்.எஃப் அதிகாரி வீரமரணம்..!

1 December 2020, 4:59 pm
LoC_Jammu_Kashmir_UpdateNews360
Quick Share

எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) துணை ஆய்வாளர் இன்று ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டிய பகுதியில் பாகிஸ்தான் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்தார். பூஞ்ச் ​​மாவட்டம் மெந்தரின் தர்குண்டி பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

“பாகிஸ்தான் இராணுவம் மீண்டும் ராஜூரி செக்டரில் அறிவிக்கப்படாத யுத்த நிறுத்த மீறலை மேற்கொண்டது. இதில் பிஎஸ்எஃப் துணை ஆய்வாளர் பாட்டின்சாட் கைட் முன்னணி பாதுகாப்பபு நிலையில் எல்லைக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிரிகளின் துப்பாக்கிக்கோட்டிற்கு பலியானார்.

அதே நேரத்தில் எதிரிகளின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பதில் மட்டுமல்லாமல் சகா ஊழியர்களின் உயிரைக் காக்கும் துணிச்சலான செயலையும் காட்டினார்.” என்று பி.எஸ்.எஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் ஜம்மு காஷ்மீரின் மத்திய பிராந்தியத்தில் பல்வேறு செக்டர்களில் பாகிஸ்தான் வீரர்கள் மேற்கொண்ட பல யுத்த நிறுத்த மீறல்களில் ஒன்பது பாதுகாப்பு வீரர்கள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், கத்துவா மாவட்டத்தின் ஹிரானகர் செக்டரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக கரோல் கிருஷ்ணா, குர்ணம் மற்றும் பன்சார் எல்லை புறக்காவல் நிலையங்களில் பாகிஸ்தான் வீரர்கள் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பிஎஸ்எஃப் வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.

இங்கு எல்லையைத் தாண்டி நேற்று இரவு 9.35 மணியளவில் துப்பாக்கிச் சூடு தொடங்கி இன்று அதிகாலை 4.40 மணி வரை தொடர்ந்தது. இந்திய தரப்பில் எந்தவிதமான விபத்து அல்லது சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த ஆண்டு எல்லையில் பாகிஸ்தானின் 4,100 க்கும் மேற்பட்ட போர்நிறுத்த மீறல்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த பத்து ஆண்டுகளில் மிக உயர்ந்ததாகும்.

Views: - 0

0

0