ட்ரோன் மூலம் ஜம்மு காஷ்மீரில் ஆயுதம் கடத்திய பாகிஸ்தான்..! கடத்தலை முறியடித்த இந்திய எல்லை பாதுகாப்புப் படை..!

14 May 2021, 7:47 pm
BSF_Border_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரின் சம்பா செக்டரில் ட்ரோனில் பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) கைப்பற்றியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டில், இந்தியாவும் பாகிஸ்தானும் அமைதியைக் கடைபிடிப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர், ஒரு முறையைத் தவிர துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் எதுவும் நிகழவில்லை. வழக்கமாக துப்பாக்கிச்சூடு என்பது எல்லையில் இந்திய பாதுகாப்புப் படையினரை திசைதிருப்பி, தீவிரவாதிகளை உள்ளே அனுப்ப பாகிஸ்தான் பயன்படுத்தும் உத்திகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சமீப காலமாக பாகிஸ்தான் தனது வழக்கமான யுக்தியை மாற்றி, தீவிரவாதிகளை சுரங்கப்பாதை வழியாகவும், ஆயுதங்களை ட்ரோன் மூலமும் அனுப்புவதாகக் கூறப்படுகிறது. இதை நிரூபிக்கும் விதமாக அவ்வப்போது ட்ரோன் மூலம் அனுப்பப்படும் ஆயுதங்கள் இந்திய வீரர்களால் கைப்பற்றப்படுவது வழக்கமாக உள்ளது. 

அதே போன்ற ஒரு சம்பவத்தில் இன்று எல்லைப் பாதுகாப்புப் படை பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் சம்பா செக்டரில் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக்கடத்தலை முறியடித்துள்ளது.

“எல்லைப் பாதுகாப்புப் படையின் எச்சரிக்கை மிகுந்த வீரர்கள் இன்று காலை பாகிஸ்தானின் ட்ரோன் மூலம் கைவிடப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சம்பா பகுதியில் பாலிதீன் பாக்கெட்டில் இருந்ததைக் கண்டறிந்துள்ளன” என்று பிஎஸ்எஃப் தெரிவித்துள்ளது.

ஆயுதங்களின் குவியலில் ஒரு ஏ.கே 47 துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு கைத்துப்பாக்கி மேகஸின் மற்றும் 15 கைத்துப்பாக்கி ரௌண்டுகள் ஆகியவை ஒரு மரப் பெட்டகத்தில் வைத்து ஒரு ட்ரோன் மூலம் கடத்தப்பட்டுள்ளது.

Views: - 96

0

0