டிஜிட்டலுக்கு மாறும் எல்லைப் பாதுகாப்பு..! 436 ட்ரோன்களை வாங்க முடிவு..! பி.எஸ்.எஃப் புதிய தலைவர் அதிரடி..!

23 August 2020, 6:47 pm
BSF_UpdateNews360
Quick Share

எல்லை பாதுகாப்பு படையின் (பி.எஸ்.எஃப்) முழுநேர இயக்குனர் ஜெனரலாக ராகேஷ் அஸ்தானா பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள எல்லை கண்காணிப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை முழுமையாக செயல்படுத்த 436 சிறிய மற்றும் மைக்ரோ ட்ரோன்களுக்கான ஒப்புதலுடன் படைகளின் தொழில்நுட்ப மேம்பாடு தொடங்கப்பட்டுள்ளது.

விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை (சிஐபிஎம்) திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் எல்லையில் பிஎஸ்எஃப் நிர்வகிக்கும் அனைத்து 1923 எல்லை புறக்காவல் நிலையங்களும் 1,500 நிலைகளைக் கொண்ட செக்டரின் தலைமையகத்திலிருந்து சென்சார்கள், சிசிடிவி மற்றும் ட்ரோன் கண்காணிப்பைக் கொண்டிருக்கும் வகையில் மாற்றப்பட உள்ளது.

ட்ரோன்களை பயன்படுத்தி, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கணினி திரையின் மூலம் எல்லையைக் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், எல்லையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஆயுத போக்குவரத்தையும் சுட்டு வீழ்த்த முடியும்.

சிறிய மற்றும் மைக்ரோ ட்ரோனின் விலை சுமார் 88 கோடி ரூபாயாக இருக்கும் என்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர், பாதுகாப்பு நிறுவனங்களின் உதவியுடன் பிஎஸ்எஃப் தற்போது பஞ்சாப் எல்லையில் ஒரு உள்நாட்டு ட்ரோன் எதிர்ப்பு முறையை பரிசோதித்து வருகிறது.

கடந்த ஒரு வருடத்தில், பாகிஸ்தான் ராணுவம் சீன வணிக ட்ரோன்களைப் பயன்படுத்தி பஞ்சாபில் உள்ள காலிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜிஹாதிகளுக்கும் தாக்குதல் துப்பாக்கிகள், துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளை கொண்டு செல்வதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வெள்ளிக்கிழமை காலை தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து ஹெராயின் சுமந்து வந்த ஐந்து பாகிஸ்தான் ஊடுருவல்காரர்களைக் கொன்றதன் மூலம், புதிய இயக்குனர் ஜெனரல் தனது நோக்கங்களை தெளிவுபடுத்தியுள்ளார். இரு எல்லைகளிலும் பிஎஸ்எஃப் தீவிரமாக செயல்படும் என்றும் எந்த இந்திய விரோத நடவடிக்கையையும் அனுமதிக்காது என்றும் டார்ன் தரன் செக்டரில் வெற்றிகரமான நடவடிக்கையை மேற்கொண்ட பி.எஸ்.எஃப் தலைவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

ராகேஷ் அஸ்தானா, போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பின் இயக்குனர் ஜெனெரலாகவும் உள்ள நிலையில் பி.எஸ்.எஃப்’இன் புலனாய்வு பிரிவை புதுப்பித்து, ஆப்கானிஸ்தான் போதைப்பொருட்கள் பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து இந்தியாவிற்குள் வருவதை முழுமையாக தடை செய்யும் முயற்சியில் உள்ளது தெரிகிறது. 

கடந்த தசாப்தத்தில், இந்தியா போதைப்பொருள் கடத்தலின் மையமாக மட்டுமல்லாமல், ஆப்கானிஸ்தானில் இருந்து ஹெராயின் மற்றும் கோகோயின் போன்ற போதைப்பொருட்களின் முக்கிய நுகர்வோராகவும் மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 45

0

0